அட்டகாசமான சுவையில் இறால் பிரியாணி செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
இறால் - 1/2 கிலோ
அரிசி - 2 ஆழாக்கு
வெங்காயம், தக்காளி - தலா 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 2

செய்முறை:
 
இறாலை குடல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும். பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு-  விழுது சேர்த்து வதக்கவும்.
 
பின்னர் தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி இலை, புதினா இவற்றையும் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், தயிர் சேர்க்கவும். இறாலை நன்கு வதக்கிவிட்டு அரிசியைச் சேர்த்து வதக்கவும்.
 
பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை பங்கு நீரும், சாதாரண அரிசிக்கு இரு பங்கு நீரும் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ‘தம்’ போட்டு பிரியாணியை இறக்கிவிடவும். சுவையான இறால் பிரியாணி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்