செய்முறை:
முதலில் ஆட்டுக்கால்களை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த ஆட்டுக்கால்களை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். ஆட்டுக்காலுடன் 100 கிராம் சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
தனியா தூள், மிளகு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் சேர்த்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
இப்போது ஆட்டுக்கால் சூப் தாளிப்பதற்கு ஒரு சின்ன கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சிறிதளவு சீரகம், 2 சின்ன வெங்காயத்தை நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்தவற்றை சூப்பில் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் சூப் தயார்.