கட்லட் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் மீன் கட்லெட் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கு சமைத்து கொடுத்துப் பாருங்கள், மீண்டும் மீண்டும் செய்து தரச்சொல்லி உங்களையே சுற்றி வருவார்கள்.
வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி ஆவியில் வேகவைத்து மசித்த மீனை கலவையில் சேர்க்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.