எலும்பு இல்லாத சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோழி கறியுடன் இஞ்சி, பூண்டு, சில்லி பேஸ்ட், வெங்காயம், வெள்ளை மிளகு, அனைத்தையும் அரைத்து அதனுடன் உப்பு, அஜினோமோட்டோ போட்டு கார்ன் ஃப்ளார், மைதா, முட்டை சேர்த்து நன்கு கலந்து ஊற விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான சைனீஸ் சிக்கன் பக்கோடா தயார்.