முட்டைக் குழம்பு

முட்டைக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள

அவித்த முட்டைகள் - 5
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
தக்காளி - 150 கிராம
வெங்காயம் - 2
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்த
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முற

வெங்காயத்தை பொடியாக வெட்டவும். தக்காளியை தோல் உரித்து பிசைந்து கொள்ளவும். தேங்காயை நன்கு அரைக்கவும்.

எண்ணெயைப் பாத்திரத்தில் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய், மல்லித் தூள், தேங்காய் போட்டு நீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். குழம்பு சேர்ந்து வந்ததும் முட்டைகளைத் தோல் உரித்துப் போட்டு இறக்கவும்.

வெறும் காரக் குழம்பில் காய்க்குப் பதிலாக அவித்த முட்டைகளைப் போடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்