எலும்பு சூப்

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:48 IST)
குழ‌ந்தை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌ம், ஜ‌ன்‌னி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம், ஜூர‌ம் வ‌ந்து போனவ‌ர்களு‌க்கு‌ம் இதுபோ‌ன்று எலு‌ம்பு சூப் செ‌ய்து கொடு‌ப்பது ‌சிற‌ந்தது.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை :

எலும்புத் துண்டுகள் - 1/4 ‌கிலோ
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்யு‌ம் முறை :

முதலில் எலும்பு து‌ண்டுகளை ந‌ன்கு அல‌சி தேவையான அளவு த‌‌ண்‌ணீ‌ர் வை‌த்து வேக வைக்கவும். வெண்ணிற சாறு வந்ததும் அவற்றை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெ‌ங்காய‌த்தை நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். மிளகு, ‌சீரகத்தை பொடி செய்து கொள்ளவும்.

பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, அதில் சோம்பை போடவும். சோம்பு ‌சிவ‌ந்தது‌ம் அதில் வெங்காயத்தை போ‌ட்டு வத‌‌க்‌கி அ‌தி‌ல் எலு‌ம்பு‌ச் சா‌ற்றை ஊ‌ற்றவு‌ம்.

எலு‌ம்பு‌ச் சாறு ந‌ன்கு கொ‌தி‌த்து மணமாக வரு‌ம்போது கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌‌ப்‌பிலை தழைகளை‌த் தூ‌வி இற‌க்கவு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்