ஈசியா செய்யலாம் பொடேட்டோ ஆம்லெட்

வியாழன், 8 ஆகஸ்ட் 2013 (13:26 IST)
FILE
இன்றைய அவசர உலகில் உணவு உண்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நிலை உள்ளது. வேலை, பள்ளி, கல்லூரி என எங்கு செல்பவர்களாக இருந்தாலும், காலை ஒரு அரை மணி நேரம் லேட்டாக எழுந்தால் அவர்கள் கை வைப்பது பிரேக்பாஸ்ட் நேரத்தில் தான்.

இன்று பெரும்பாலான வீட்டில் தினமும் கேட்கும் ஒரு வாசகம், 'எனக்கு லேட் ஆகுது, டிப்பான் வேண்டாம்' என்பது தான். இது காலப்போக்கில் ஊட்டச்சத்து குறைப்பாடு, உடல் நலக்கேடு போன்றவற்றில் கொண்டுவிடும்.

இந்த நிலையை மாற்றி வீட்டில் இருப்பவர்களை கவனித்துக்கொள்ள புதிய முறைகளை கையாள வேண்டியிருக்கிறது. இதில் சமைக்கும் விதமும் அடங்கும்.

FILE
இப்படி காலை உணவை பற்றி கவலைப்படாமல் எஸ்கேப்பாகும் மக்களின் நலனுக்காக எளிமையான பொடேட்டோ ஆம்லெட்டை பிரேக் பாஸ்ட்டுக்கு செய்து பாருங்கள். நேரமாகிறது என்று சொல்பவர் கூட, நிதானமாக சாப்பிட்டு செல்வார்கள்.

தேவையானவை

உருளைக்கிழங்கு - 1
முட்டை - 3
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
பச்சை மிளகாய் - தேவைகேற்ப
உப்பு/ எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை

முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் நன்றாக அடித்த முட்டை, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்குங்கள்.

இந்த கலவையுடன் துருவிய உருளைக்கிழங்கையும் சேர்த்து கலக்கி ஆம்லெட்டுகளாக ஊற்றி சூடாக பரிமாறுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்