உடலில் ஏற்படும் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படும் போது அதற்கு மருந்தாக அமைகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலில் நமைச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை உடல் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிக்கும் இயல்பு கொண்டது. முதலில் கண்களை பாதிக்கும். பின்னர் நரம்புகளை பாதிக்கும். எனவே சர்க்கரை நோய்க்கு இந்த இன்சுலின் இலைகள் சிறந்த மருந்தாகிறது.
இதற்கு தேவையான பொருட்கள்: இன்சுலின் இலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன். ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் சம அளவு இன்சுலின் இலைச் சாறை சேர்க்க வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் தேன் சேர்க்கவேண்டும். இதை நன்றாக கலக்கி முகப்பரு, கரும்புள்ளிகள் ஆகிய இடங்களில் தடவி வர வேண்டும். இதன் மூலம் அவற்றின் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.