சித்த மருத்துவத்தில் அத்திபழம் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்திபழம் மட்டுமல்லாமல் அத்திக்காய்,அத்திப் பூ, அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப் பால் அனைத்துமே மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
அத்திபழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. இரத்த விருத்தியை அதிகபடுத்துகிறது. பித்ததினை சரி செய்ய அத்திபழம் பெரிதும் பயன்படுகிறது.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.