பலாப்பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...!!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இவை கண்புரை, மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது. எனவே இந்த பழத்தை உணவில் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமான கண் பார்வை பெறலாம்.
பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் செல்களில் எலக்ரோலைட் பொருட்களான சோடியத்தின் அளவை சமன்படுத்துகிறது. இதனால் உடலின்  இரத்த அழுத்தம் சீராக மாறி இதய நோய்கள் மற்றும் இரத்த குழாய் பிரச்சனைகள் சரி செய்கிறது.
 
கூந்தல் ஆரோக்கியமாக இருக்க தேவையான போஷாக்கு மற்றும் மயிர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அழகான கூந்தல்  வளர்ச்சியை கொடுக்கிறது.
 
தினமும் சில துண்டு பலாப்பழம் சாப்பிடும் போது கிடைக்கும் விட்டமின் ஏ மூலம் உங்கள் உடைந்த முடிகள், வறண்ட கூந்தல்  போன்றவற்றை சரிசெய்யும்.
 
பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
 
சரும சுருக்கங்களை போக்க இந்த பலாப்பழத்தை குளிர்ந்த பாலில் ஊற வைத்து பேஸ்ட் மாதிரி அரைத்து தினமும் முகத்தில் தடவி ஒரு 6 வாரத்திற்கு செய்யும் போது சுருக்கங்கள் மறைந்துவிடும்.
 
நீரில் பலாப்பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டவும் வடிகட்டிய நீரை குடிப்பதால் ஆஸ்துமா குணப்படுத்துகிறது. வயிற்று பிரச்சனைகள் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டால் அனைத்து பிரச்சனைகளும் குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்