பார்லியை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க  உதவுகிறது.

பார்லி தானியங்களில் பீட்டா குளுகான் சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பீட்டா குளுக்கான் சத்துக்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில்  ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் பெருகச் செய்து, நோய்கள் சுலபத்தில் பாதிக்காமல் தடுக்கிறது. 
 
வைட்டமின் சி சத்தும் இந்த பார்லி தானியங்களில் இருப்பதால் அதை சாப்பிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை பன்மடங்கு வலுவடைகிறது.
 
செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த பத்திய உணவாக பார்லி இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் நுண்கிருமிகளின் பெருக்கத்தை அதிகரித்து, சாப்பிடும் உணவுகள் சுலபத்தில் செரிமானம் ஏற்பட  உதவுகிறது.
 
இரத்தத்தில் சிகப்பு இரத்த அணுக்கள் குறையும் பொழுது அனீமியா எனப்படும் இரத்த சோகை ஏற்படுகிறது. ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கு வைட்டமின் 12 சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
 
பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் காக்கப்படும். தோல் சுருக்கம், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்