பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.