மஞ்சளில் கர்குமின் என்ற பொருள் உள்ளது. இது ஈறு வலி, வீக்கம் மற்றும் எரிச்சலை சிறப்பான முறையில் குறைக்கும். மஞ்சளை வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் ஈறுகளின் மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.
பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை உங்கள் ஈறுகளின் மீது தடவி, 2 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனை வாரத்திற்கு 2-3 முறையாவது பயன்படுத்துங்கள். இதனால் பேக்கிங் சோடா வாயில் உள்ள அமிலத்தை செயலிழக்க செய்யும். மேலும் பல் பிரச்சனைகள் மற்றும் ஈறு நோய்கள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.
ஈறு அழற்சிக்கான வீட்டு சிகிச்சை என்றால் அதில் கண்டிப்பாக எலுமிச்சையும் அடங்கியிருக்கும். இதில் வைட்டமின் சி இருப்பதால் தொற்றுகளில் இருந்து அது உங்களை பாதுகாக்கும். எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து, பல் துலக்கிய பின், அதைக் கொண்டு வாயை கழுவுங்கள். ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்சனைகள் முன்பை காட்டிலும் குறையத் தொடங்கி விடும்.