இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் அக்ரூட் !!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:27 IST)
அக்ரூட் பருப்பில் உள்ள அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை ஒருவர் தினமும் சாப்பிட்டால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதைத் தடுக்கும்.


நட்ஸ் வகைகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் வால்நட்ஸில் உள்ளன. அக்ரூட் பருப்பை சாப்பிடுவதால் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்தணுக்களின் இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

வைட்டமின் E என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றத்தின் காரணமாக அக்ரூட் பருப்புகள் சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.

வறண்ட சருமத்திலிருந்து பாதுகாப்பதற்காக நீங்கள் அக்ரூட் பருப்பு எண்ணெய்யை பயன்படுத்தலாம். இரத்த அழுத்தத்தைக் குறைக்க விருப்பினால் தினமும் அக்ரூட் பருப்பை சாப்பிடலாம்.

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் அக்ரூட் பருப்பை தினமும் சாப்பிட, இரத்தத்தில் மெலடோனின் அளவு அதிகரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்