இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி முகப்பருக்களை எளிதில் விரட்ட...!

முகப்பருக்கள் முகத்தில் தோன்றினால், அவை முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம்.
சிலருக்கு முகத்தில் வெள்ளை நிறத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வரும். இந்த மாதிரியான பருக்கள் வலியுடன் அரிப்பையும் உண்டாக்கும். அவர்களுக்கு இந்த இயற்கைப் பொருட்களை பயன்படுத்தினால் முகப் பருக்களை எளிதில் போக்கலாம்.
 
சீரகத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, சீழ் வரும் இடத்தில் தடவி உலரவைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.
 
முட்டையின் வெள்ளைக் கருவை பருக்களின் மீது தடவி உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.
 
பூண்டின் சாறை பருக்களின் மீது தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சீழ் இறுகி உலர்ந்து உதிர்ந்துவிடும் மற்றும் பருக்களும் மறைந்துவிடும்.
 
பருக்கள் உள்ளவர்கள் இஞ்சி பேஸ்ட் உடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து பேஸ்ட் செய்து அதன் மேல் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சீழ் நிறைந்த பருக்கள் விரைவில் போய்விடும்.
 
டீ-ட்ரீ ஆயில் அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் போக்க வல்லது. குறிப்பாக சீழ் நிறைந்த பருக்கள் மீது இந்த எண்ணெய்யை தடவினால் விரைவில் அப்பருக்கள் போய்விடும்.
 
கற்றாழை ஜெல்கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றினால், முகம் பருக்களின்றி பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்