மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் பயன்படுகிறது.
மனித மூளையில் தோன்றும் அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள் தூளில் இருக்கும் குர்க்குமின் உதவுகிறது. பொதுவாக வயதானவர்களுக்கு உணவில் தினமும் மஞ்சள் தூள் சேர்த்து கொடுப்பது நல்லது.
பெண்கள் சிலருக்கு ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் மாறுபாடுகள் முகத்தில் தேவையற்ற ரோம முளைக்கிறது. இத்தகைய ரோமங்களை நீக்க சிறந்த இயற்கை வைத்திய பொருளாக மஞ்சள் இருக்கிறது. தினமும் மஞ்சளை நீரில் கலந்து, முகத்திற்கு நன்கு பூசி சிறிது கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் முளைக்கின்ற தேவை முடிகள் உதிரும்.
பசுமஞ்சளின் சாற்றைப் புதிதாக பூச்சி கடிபட்ட இடங்களில் தடவ வீக்கம், தடிப்பு, அரிப்பு, நீர்சொரிதல் போன்ற காணாக்கடி பிரச்னைகள் ஏற்படாது.மஞ்சள் துண்டை ஒரு ஊசியில் குத்தி அனலில் காட்டி எடுத்து அதில் இருந்து வரும் புகையை மூக்கினுள் இழுக்க மார்புச்சளி, விக்கல் போன்றவை குறையும். இந்தப் புகை பட்டால் தேள்கடி வலி குறையும்.
சொறி சிரங்கு போன்ற சரும பிரச்சனைகளுக்கும் மஞ்சள் தூள் ஏற்றது. ஜலதோஷத்தால் மூக்கில் நீர்வடிதல், மார்பில் சளி கட்டிக்கொள்வதால் போன்றவைகளால் நாம் மிகவும் அவதிப்படுகிறோம். இப்படியான காலங்களில் இரவு நேரங்களில் சூடான பசும் பாலில் சிறிது மஞ்சள் மற்றும் சிறிது மிளகு தூள் கலந்து, தினந்தோறும் பருகிவர எப்படிப்பட்ட சளி, ஜலதோஷ பாதிப்புகளும் நீங்கும்.