தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.
தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். தக்காளியிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன் சுண்ணாம்பு சத்தை நிலைநிறுத்துகின்றன.
நன்கு பழுத்த தக்காளி இரண்டு எடுத்து, சிறிது சிறிதாக அரிந்து, மிக்ஸியிலிட்டு, ஜூஸ் எடுத்து வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால் போதும், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் மற்றும் விதைகளை நீக்கிவிடுவது நல்லது.