உடல் நோய்களை வராமல் பாதுகாக்கும் துத்தி கீரை !!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:24 IST)
துத்தி கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் ஏராளமாக உள்ளதால் உடலுக்கு ஊட்டம் அளித்து நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கி பல நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.


சிலருக்கு மலம் கழிக்கும்போது ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும். இவர்கள் துத்தி கீரையை ஒரு கைப்பிடி எடுத்து, அதை நூறு மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து பால், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வலி குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்தி கீரையை நன்கு சுத்தமாக கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை என்பது இருக்கவே இருக்காது.

துத்தி கீரையை கிடைக்கும் போது காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். இந்தப் பொடியை தொடர்ந்து காலை மாலை ஒரு டீஸ்பூன் தூளை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூலப்புண்கள், மூலகடுப்பு போன்ற நோய்கள் முற்றிலும் நீங்கிவிடும்.

சிலருக்கு எப்பொழுதும் பல் ஈறுகளில் இரத்தம் வடிந்து கொண்டே இருக்கும். இவர்கள் துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் இரத்தம் கசிவது உடனே நின்றுவிடும்.

அல்சர் என்று சொல்லப்படுகின்ற குடல்புண் இருந்தால், இந்த துத்தி கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் போதும் குடல் புண்கள் முற்றிலும் ஆறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்