பீர்க்கங்காய் மித வெப்பமான சீதோஷ்ண நிலையில் வளரக் கூடிய ஓர் கொடி வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். பீர்க்கங்காய் ஓர் மலமிளக்கியாக மட்டுமின்றி வயிற்றைக் கழியச் செய்வதாகவும் விளங்குகிறது. சிறுநீரைப் பெருக்கிச் சீராக வெளித்தள்ள வைப்பது, வீக்கங்களைக் கரைக்க உதவுகிறது.
பீர்க்கங்காய் ஓர் சத்தான உணவாவது மட்டுமன்றி அதில் நிறைய நார்சத்து பொதிந்துள்ளது. விட்டமின் பி2, விட்டமின் சி, கரோட்டின், நியாசின், இரும்புச்சத்து, சிறிதளவு அயோடின் மற்றும் புளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.