அரிசி மாவு ஃபேஸ் பேக்: அரிசி மாவில் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் உட்பொருட்கள் உள்ளன. இவை சருமத்தை பிரகாசமாகவும், பொலிவோடும், மென்மையாக்கவும் செய்யும். பால் சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, வறட்சியடையாமல் தடுக்க உதவும்.
செய்முறை: ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக்: உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் செய்யக்கூடிய தன்மை உடையது. எனவே இதைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று பொலிவோடு காணப்படும்.
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1.
செய்முறை: உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து பின் அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.