எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெய்யை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவோடு காணப்படும்.
சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, அந்நீரை குளிர் வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் படையைக் கட்டுப்படுத்தும்.
வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.