கருணைக்கிழங்கு: கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், மூலம் போன்றவற்றில் இருந்து குணம் பெறலாம். மேலும் கருணைக் கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்குப் பலம் சேர்க்கும். கருணைக்கிழங்கைச் சமைக்கும்போது சிறிது புளி சேர்த்துச் சமைத்தால் அரிப்புத் தன்மை நீங்கும்.
கேரட்: கேரட்டில் வைட்டமின் ஏ, கே, பி1, பி2, பி6, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. புற்றுநோய் எதிர்ப்புச் சக்தியும் உள்ளது. எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதைத் தடுக்கலாம்.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம்தரும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளதால், அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது.
முள்ளங்கி: முள்ளங்கி, தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை தெளிவாக்கும். பசியைத் தூண்டும். சிறுநீரகக் கற்களை கரையச் செய்யும். அதிக நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன.