சாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் சங்குப்பூவின் பயன்கள் !!

சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சேர்ந்தது. இதன் பூக்கள் நீல நிறத்திலும் வெண்மை நிறத்திலும்  காணப்படும்.

சங்குப் பூ இந்தத் தாவரம் முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரைக்கும். வேருடன் மிளகு  சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை மாலை அருந்திவர சளி கோழை நீங்கும். 
 
இதன் பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ என்ப் பெயர் வந்தது. காக்கண விதைகள் நறு மணம் உடையதாகவும் புளிப்புச் சுவை  கொண்டதாகவும் இருக்கும். இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் கொல்லுதல், தாது வெப்பு அகற்றுதல், பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.
 
பெண் உறுப்புபோல் தோன்றும் இம்மலர் பெண்களின் கர்ப்பப்பைத் தொடர்பான மாதவிடாய் சிக்கல்கள், குழந்தையின்மைச் சிக்கல்கள் மற்றும் சிறுநீர் தொற்றுகளைச் சரி செய்யக்கூடியது எனவும் சில மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. 
 
இம்மலர்கள் மனசோர்வு, மனக்கவலை, உடலில் உள்ள அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ளதால் இது நம்  உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமைடவைதைப் பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியமுடன் இருக்கச்செய்வதுடன் நம் சருமம் இளைமையுடன் தோன்றவும் உதவுகிறது. மூச்சுத் திணறல், இருதய சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
 
உலர்ந்த மலர்கள், புளூ டீ எனும் நீல நிற டீ தயாரிக்கவே பிரத்யேகமாக விலைக்கொடுத்து பல  நாடுகளில் வாங்கப்படுகின்றன. ஒரு டம்ளர் சுடு நீரில் 5 நீல நிற  உலர்ந்த  மலர்களைப் போட்டு 10 நிமிடம் ஊறவைத்தால் புளூ டீ ரெடி. இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
 
நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்