சிறுதானியங்களை உட்கொள்வதின் மூலம் உண்டாகும் நன்மைகள்...!!

சிறுதானியங்கள் இரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து இரத்தத்தை திரவ நிலையிலேயா வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வாதம் மற்றும் தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகிறது.
சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் ‘பி’ கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திறமையாக உடைத்து அதனை ஆற்றலாக  மாற்றுகின்றன. வைட்டமின் ‘பி’ இரத்தத்தில் உள்ள ஹோமோசஸ்டீன் அளவைக் குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்புக் கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது.
 
தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளைவிட சிறுதானியங்களில் அதிக அளவில்  கிடைக்கிறது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் போன்ற தேவையற்ற கூடுதல்  பொருட்கள் சிறுதானியங்களில் இல்லை.
 
சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அடிக்கடி பசிப்பதைத் தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கிறது. இதனால் உடல்  எடையை இழக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாகச் சிறுதானியங்களைச் சேர்த்துக்  கொள்ளவேண்டும்.
 
சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலுருந்தும் 50% சதவீதம் குறைக்கலாம். சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும்  ஒவ்வாமை இல்லாத தானியங்களாகக் கருதப்படுகிறது.
 
சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் மலக்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்குத் தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.
 
நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாக பெண்கள் நார்ச்சத்து மிகுதி ஆன உணவினை உட்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாக்குவதற்கு சரியான தீர்வாக அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்