நேரம் மாற்றி சாப்பிடுவது, தொடர்ந்து காலை உணவு தவிர்ப்பது, அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிடுவது, ஹோட்டல் சாப்பாடு போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படக்கூடும். இவை அல்சர் மற்றும் கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கும். இதிலிருந்து மீளவும் உங்களுக்கு முட்டைகோஸ் தண்ணீர் உதவுகிறது. மேலும் வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.
நோய் குறித்த பயத்தை விட, அதனால் ஏற்படுகிற பின் விளைவுகள், சிகிச்சை முறைகளை நினைத்து தான் பலருக்கும் பயமே வருகிறது, இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படக்கூடும்என்று சொல்லப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய சல்ஃப்போரபேன் என்ற சத்து உடலில் கேன்சர் செல்கள் வளராமல் தடுத்திடும். அதோடு முட்டைகோஸ் ஜூஸில் அதிகப்படியான ஐசோசியனேட் இருக்கும் இவை உள்ளுருப்புகளில் குறிப்பாக நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுத்திடும்.