ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும் சுக்கான் கீரை !!

Webdunia
சுக்கான் கீரை மருத்துவப்பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரை பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. 


சுக்கான் கீரையை புளி சேர்க்காமல்  பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும்.
 
இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இவர்கள் சுக்கான்  கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும். தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம். 
 
சுக்கான் கீரை மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து. இதயத்தை பலப்படுத்தும்.
 
சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும். சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல்  நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும்.
 
சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்