வீட்டில் பல்லி தொல்லையை போக்க சில டிப்ஸ் !!

வீட்டில் எலிகளுக்கு அடுத்தப்படியாக அதிக பிரச்சனைகளை தருவது இந்த பல்லிகள் தான். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில், பல்லிகள் இருந்தால் அது தொல்லையாகவே இருக்கும்.

பிரிஞ்சு இலை: பிரிஞ்சி அல்லது பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் தான் இந்த பிரிஞ்சு இலை. இந்த இலையை நெருப்பில் எரித்தால் கிளம்பும்  புகையை, பல்லி இருக்கும் இடங்களில் பரவ விடுங்கள். பிறகு பல்லிகள் நடமாட்டம் அப்பகுதியில் இருக்காது.
 
கோழி முட்டை ஓடு: உடையாத கோழி முட்டை ஓடு இருந்தால், அதனை பல்லி சுற்றும் இடங்களில் ஆணி அடித்து அதன் மேல் முட்டை ஓட்டை வையுங்கள்.  நம் வீட்டில் கோழி வளர்ப்பதாக நினைத்து பல்லிகள் உள்ளே வராது. அது பல்லிக்கு அச்சமூட்டும் ஒரு பொருள்.
 
வெங்காயம்: வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த துண்டை, பல்லி உலாவும் இடங்களில் வைத்துவிடுங்கள். அப்போது, பல்லியின்  தொந்தரவு குறையும். மேலும், வெங்காய சாற்றை அப்பகுதியில் தெளித்தாலும் பல்லி வராது.
 
பூண்டு: பூண்டு பற்கள் பல்லிக்கு ஆகாவே ஆகாத பொருட்களில் ஒன்று. எனவே அவற்றை பல்லி எப்போதும் திரியும் இடங்களில் வைத்து விட்டால், அந்த  இடத்தில் இருந்து பல்லி காணாமல் போய்விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்