மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் எளிய குறிப்புகள் !!

மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியைக் குறைக்க உதவும் சில வழிமுறைகளைப் பற்றி இங்கு கொடுத்துள்ளோம். இவை பரிசோதிக்கப்பட்டு, பலன் தந்த வழிமுறைகளாகும். 

கால்சியம் நிறைந்திருக்கும் ஒரு கப் பாலை உங்களுடைய காலை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப் போராடவும் மற்றும் நிவாரணம்  பெறவும் முடியும். நீங்கள் பால் குடிக்க விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் கால்சியம் மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம். 
 
மாதவிடாய்க்கு முன்னதாக நீங்கள் சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு  எதிராக திறனுடன் போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்றி விடும். 
 
கேரட் கண்களுக்கு மிகவும் நல்ல உணவாக இருந்தாலும், மாதவிடாய் வலியை நீக்கவும் உதவுகிறது. கேரட் ஜுஸை ஒரு கிளாஸ் தினமும் குடித்து வந்தால்,  முறையான இரத்த ஓட்டத்தைப் பெற முடியும் என்று மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கற்றாழை உடலில் வரும் அனைத்து விதமான  பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கும்.
 
மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம்  வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும்.
 
தன்னுடைய அமைதிப்படுத்தும் மற்றும் ஆற்றுப்படுத்தும் குணத்திற்காக பெயர் பெற்றுள்ள மருந்தாக லாவெண்டர் உள்ளது. மாதவிடாயின் போது லாவெண்டர் எண்ணெய்யை வயிற்றில் தடவினால், 10 முதல் 15 நிமிடங்களுக்குள் வலியைக் குறைத்திட முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்