செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும் சேப்பங்கிழங்கு...!!
சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
சேனைக் கிழங்கு செரிமானப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கின்றது. மேலும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளையும் சரி செய்கின்றது.
சேப்பங்கிழங்கு வழவழப்பான தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும்.
சேப்பக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் குடல் புண்கள் விரைவில் குணமாகும்.
சேனைக் கிழங்கானது எலும்பினை வலுவாக்குகின்றது, மேலும் இது இதய நோய்களினை சரி செய்வதாகவும், மேலும் இதய நோய் வராமல் தடுக்கவும் செய்கின்றது.
சேனைக் கிழங்கில் சர்க்கரை அளவானது குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் தயங்காமல் சாப்பிடலாம். இது நிச்சயம் சர்க்கரையினைக் கட்டுக்குள் வைக்கவே செய்கிறது. மேலும் இது கெட்ட கொழுப்பினைக் கரைப்பதால், உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் நிச்சயம் இதனை எடுத்துக் கொள்வது நல்லது.
நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வரவிடாமல் பாதுகாக்கிறது. சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணமாக்கும். சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் ஏ மற்றும் இ சருமத்தினைப் பாதுகாக்க உதவுகிறது.