சார பருப்பில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.
ஆயுர்வேத மருந்துகளில், சாரபருப்பு பெரும்பாலும் சருமத்தில் அரிப்பு, வேர்க்குரு போன்ற சரும சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், எடை கூட நினைப்பவர்கள் தினமும் 10 முதல் 15 கிராம் சாரபருப்பு சாப்பிடலாம். அதிக எடை, கொழுப்பு உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.