உடல் ஆரோக்கியத்தை காக்கும் மாதுளம் பழம்...!!

Webdunia
மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அவையே நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது. மேலும் இந்த மாதுளம் பழத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக உள்ளன. 

பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பக ஒரு சில பழங்களில் உள்ள நன்மைகள் அளவிட முடியாதவை. இவ்வாறு அளவிட முடியாத  நன்மைகள் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. 
 
மாதுளைப் பழத்தில் மூன்று வகையான சுவைகள் இனிப்பு, புளிப்பு மற்றும் ஆகியவை உள்ளன. எனவே இப்பழத்தைப் பெரியோர் முதல் சிறு குழந்தைகள்வரை அனைவரும் விரும்புகின்றனர்.
 
சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுத்து ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.  இப்பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு இருப்பதால் பாக்டீரியாவின் தொற்றிலிருந்து முழுமையாகச் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
 
மாதுளம் பழத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட முகத் தேய்ப்பான் மிக நல்ல பயன்களைக் கொடுப்பதோடு எந்தவித பக்கவிளைவுகளையும் தருவதில்லை. கடுமையான  சூரியக் கதிர்களின் விளைவுகளை மாற்றியமைப்பதற்கு மாதுளைப் பழங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
 
சருமத்தின் ஆரோக்கியத்தைப் பரமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின் ‘ஈ’ மாதுளைப் பழங்களில் அதிக அளவில்  காணப்படுகிறது. இப்பழம் உடலில் உள்ள செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்து இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.
 
மாதுளைப்பழம் வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் ‘கே’ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் முடிக்கு உகந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன.  இவை முடி வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்