அவுரி இலையை நன்றாக அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து கால் லிட்டர் வெள்ளாட்டுப்பாலில் கலந்து வடிகட்டி காலை வெறும்வயிற்றில் மூன்று நாட்களுக்கு கொடுக்க மஞ்சள் காமாலை குணமாகும்.
யானை நெருஞ்சில், அவுரி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு எடுத்து மோரில் கலந்து பத்து நாட்களுக்கு காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.
தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும். வேர் விஷத்தை முறிக்கும். கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.
மஞ்சள் காமாலை தீர அவுரி இலைகளை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, ஒரு டம்ளர் காய்ச்சிய வெள்ளாட்டுப்பாலில் கலக்கி, வடிகட்டி அதிகாலையில் குடித்துவர வேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.