அறுகம்புல் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு.
திடீரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும், அறுகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.
ஒரு பிடி அருகம்புல், மிளகு 10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும்.
அறுகம்புல் ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க, நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.