ஜீரண கோளாறுகளை நீக்கும் பன்னீர் திராட்சை !!

பன்னீர் திராட்சைதான் நம் ஊர் திராட்சை. கொட்டையுடன் இருக்கும் திராட்சையில்தான் சத்துக்கள் அதிகம் கிடைக்கும். உடலில் அதிகப்படியான பித்தத்தைச் சரி  செய்யும். 

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, 1448531720-5363இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை  உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.
 
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். மஞ்சள் காமாலை இருப்பவர்கள் கொட்டையுடன் திராட்சையை  அரைத்து, சாறு எடுத்து அருந்தினால், நோயின் தீவிரம் குறையும்.
 
ரத்தக்குழாயில் ஏற்படும் பிரச்னைகள், வெரிகோஸ்வெயின் முதலான தொந்தரவுகளைத் தடுக்கும் ஆற்றல், திராட்சைக்கு உண்டு. திராட்சையில் உள்ள  ரெஸ்வெரட்ரால் சத்து இதயம் சீராக இயங்கத் துணைபுரியும். திராட்சை ரசம் சிறந்த இதய டானிக்.
 
திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும். திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
 
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.
 
உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும்.  இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்