வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் சிறுகீரையில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது.
உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும்போது குறைந்து கொண்டே வரும். சிறுகீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாக்கும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு பாதுகாக்கிறது.