பொன்னாங்கண்ணி கீரை இருக்கும் விட்டமின் ஏ, கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி போன்றவை நீங்கும்.
அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இக்கீரையை சூப்பாக அருந்தினால் குணப்படுத்தும், தாய்மார்களுக்கு நன்கு பல்சுரக்கச் செய்யும். குடலில் ஏற்படும் இரணங்களை விரைந்து ஆற்றும், கல்லீரலை நன்கு பலப்படுத்தி காமாலை போன்ற தொற்றுக்களை வராமல் பாதுகாக்கும். மேலும் நோய் எதிர்ப்பு திறனை நம் உடலுக்கு அதிகமாக்கிக்கொடுக்கிறது, அதோடு ஜீரண மண்டலத்தை உடலில் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
விழித்திரை நோயைப்போக்கும், கண்ணொளி கொடுக்கும், வாத தோசத்தினை நீக்கும்,. பீனிசம், மூக்கடைப்பு நோயை போக்கும். மூலரோகம், பித்தப்பை, கல்லீரலை பலப்படுத்தும், மஞ்சள் காமாலையை குணப்படுத்தும், காய்ச்சலை சரி செய்யும், உடல் சூடு மற்றும் உடல் நஞ்சுக்களை நீக்கும்.
குடல் தொற்று மற்றும் புழுக்களை வெளியேற்றும், ஆண்களுக்கு ஏற்படும் விந்து ஒழக்கை சரி செய்யும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
உபயோக்கும் முறை: துவையலாகச் செய்து தினமும் உண்டு வரலாம். கீரையாகக் கடைந்து தினமும் உண்டு வரலாம். பொன்னாங்கண்ணி கீரையை நல்ல எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு, கண் ரோகம் ஒற்றைத்தலைவலி அனைத்தும் நீங்கும்.