கசகசாவிற்கு நோய்த்தடுப்பாற்றலையும், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலும் உண்டு. மேலும் சருமத்தில் தேமல், கரும்புள்ளிகள் இருந்தால் கசகசாவை தேங்காய்பாலில் அரைத்து அதில் பூசவேண்டும்.
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதிலுள்ள ஒலியீக் ஆசிட், லினோலியிக் ஆசிட் போன்ற அமினோ அமிலங்கள் மாரடைப்பைத் தடுத்து, பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
கசகசா விதை தயாமின், பண்டோதேனிக் அமிலம், ரைபோ பிளேவின், போலிக் அமிலம் போன்ற வைட்டமின்களுக்கு மிகச்சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.