சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். ஏராளமான கூந்தல் பராமரிப்பு பொருட்கள் வந்தாலும், கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இன்றளவும் பல பெண்கள் சிகைக்காய் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.
சிகைக்காய் கூந்தல் பராமரிப்பு மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் மற்றும் ஆயிர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது சிகைக்காய் பொடி தேய்க்க தேகத்தில் உள்ள அழுக்கை அகற்றும். சொறி, சிரங்கு முதலியவற்றை நீக்கும்.
முடியின் நிறத்தை தக்க வைக்கும் கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி, நீண்டு நிலைக்கும். பொடுகை தடுக்கும் பொடுகை எதிர்த்து போராடவும் சீயக்காய் உதவுகிறது.