ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி, சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சுத்தமாகும்.
நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்தியகல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.