காளானில் உள்ள சத்துக்கள் பலவகை நோய்களைத் தடுக்கவும், சிறந்த ஆரோக்கியத்தையும் தரவும் வல்லது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய் மற்றும் மார்பகப் புற்றுநோயை தவிர்க்கலாம்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் வாய்ந்தது காளான். மேலும், நோய் எதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்பு செல்களைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும்.