உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்க பாதாம், அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை மற்றும் பிஸ்தா போன்ற உலர்ந்த பழங்களை சாப்பிடுங்கள். ஏனெனில், இவற்றில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது, இது கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.
கொத்தமல்லி விதைகள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவையும் கொழுப்பின் அளவையும் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டு கரண்டி கொத்தமல்லி விதைகளை எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். இந்த கலவையை கொதித்த பின் வடிகட்டி, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உட்கொள்ளுங்கள். இதன் சுவையை மேம்படுத்த பால், சர்க்கரை அல்லது ஏலக்காயை சேர்க்கலாம்.