செரிமான திறனை மேம்படுத்தும் கிவி பழம் !!

சனி, 19 மார்ச் 2022 (17:05 IST)
இந்த கிவி பழம் சாப்பிட இனிப்பு புளிப்பு சுவையுடன் இருக்கும். கிவி பழத்தின் நிறம் வெளியே பழுப்பு நிறமாகவும் உட்புறம் பச்சை நிறமாகவும் காணப்படும்.


வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நீரிழிவு நோய் வராமல் தடுக்கும். கிவி பழம் உதவி புரிகிறது.

கிவி பழத்தை சிறிது சிறிது துண்டுகளாக வெட்டி பால்,சர்க்கரை சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். கிவி பழத்தை பிறந்த குழந்தை அதாவது 8 மாதம் வரை உள்ள குழந்தைகள் சாப்பிட கூடாது.

கிவி பழத்தை உலர வைத்து சாப்பிடுவதால் முகம் பளபளப்பாக இருக்கும். தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த உலர்ந்த கிவி பழத்தை எடுத்து கொள்ளலாம்.

நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமான திறனை மேம்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த கிவி பழத்தை சாப்பிட்டு வர விரைவில் ஆஸ்துமா குணமாகும்.

உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் இந்த உலர்ந்த கிவி பழத்தை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்