முகம் பளிச்சென்று ஜொலிக்க தினமும் இதை ஸ்கரப் செய்தாலே போதும் !!

கருப்பாக இருப்பவர்கள், முழங்கை மற்றும் முழங்கால் பகுதியை வெள்ளையாக மாற்றவும், முகத்தில் இருக்கும் தழும்புகளை போக்கும் குறிப்பை பற்றி பார்ப்போம். 

அரிசி மாவு சிறந்த ஸ்க்ரப்பராக நம்முடைய தோல் பகுதிக்கு இருக்கும். பால் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்யை நீக்கும். எலுமிச்சை  நுண்கிருமிகளை அழித்து முகத்தை சுத்தமுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
 
தேவையான பொருட்கள்: அரிசி மாவு, பால், எழுமிச்சை சாறு. முதலில் ஒரு கைப்பிடி அரிசியை ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் ஊற  வைத்தால் போதுமானது. அதனுடன் பால் சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சையை எடுத்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
 
ஒரு சிறிய பௌலில் எலுமிச்சை சாறை பிழிந்து அதைப் பஞ்சினால் நனைத்து முகம், கழுத்து, முழங்கால், முழங்கை போன்ற பகுதிகளில் மசாஜ் செய்து  கொள்ளவும். பின் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிக் கொள்ளவும். இதனால் முகத்தில் படிந்துள்ள அழுக்குகள் கிருமிகள் போன்றவை நீங்கி விடும்.
 
அதன் பின் நாம் அரிசி மாவையும், பாலையும் சேர்த்து ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து வைத்திருப்பதை முகம், கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற  பகுதிகளில் பேக் போல் தடவிக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்து ஈரப்பதம் வற்றியதும் சாதாரண தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து கொண்டு விடுங்கள். இதை செய்யும் பொழுது மூன்றாவது நாளிலேயே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தென்படும். 
 
இவை முகம், கழுத்து, கை, கால், முழங்கை, முழங்கால் பகுதிகளில் இருக்கும் கருமையும் நீங்கி விடும். ஒரு வாரம் செய்து விட்டு நிறுத்தி விடாதீர்கள். உங்கள்  பிரச்சினை தீரும் வரை தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் தான் முழுமையான பலனை அடைய முடியும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்