சிறுநீர் போகும்போது எரிச்சல், சிறுநீரகத்தில் கற்கள் போன்ற உபாதைகளுக்கு சித்த, ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது. உலோகங்களை கரைக்கும் ஆற்றல் கொண்டதால் சித்த மருத்துவத்தில் பஸ்பங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மில்லியாக சுண்ட வைத்து வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்கு வெளியேறும்.
சிறுநீர் எரிச்சல் குறையும். கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும். கால், கை, மூட்டுகளில் ஏற்படும் வலியை விரட்டும்.
கோபுரம்தாங்கி மூலிகை எனப்படும் இந்த மூலிகை சிறப்பாக செயல்படுகின்றது. இந்த மூலிகையின் இலைப்பொடியுடன், சம எடை வில்வ இலைப்பொடி, சம எடை பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் 40 நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.