காரம் குறைவாக காணப்படும் குடை மிளகாய் ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த குடை மிளகாய்களால் என்ன பயன் என்பது குறித்து பார்ப்போம்
குடை மிளகாயில் அபிஜெனின், குவெர்செடின், கேப்சியேட் உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன.
குடை மிளகாயில் நம் கண்களை பாதுகாக்கும் கரோட்டின்கள் உள்ளது.
சிவப்பு குடை மிளகாயில் உள்ள கேப்சந்தின் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
குடை மிளகாயில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
குடை மிளகாயில் உள்ள கரோட்டினாய்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகின்றன.
குடை மிளகாய் சாப்பிடுவது ப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.