இஞ்சி மலச்சிக்கலைப் போக்கும். மேலும் களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும். ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும். ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவ நல்ல பலன் கிடைக்கும்.
சளி, தும்பல், உருமலைக் கட்டுப்படுத்தும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இஞ்சி உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும். தினந்தோறும் காலையில் சர்க்கரை பாகில் ஊறவைக்கப்பட்ட இஞ்சியை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கி, ஜீரண தன்மை மேம்படும்.