நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தய கீரை !!

நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து 40 நாட்கள் வெந்தய கீரையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். அதனால் நீரிழிவு நோயாளிகள் வெந்தய கீரையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்
 
வெந்தய கீரை ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். மேலும் கண்பார்வை குறைபாடுகளை சரிசெய்யும். அதேப்போல் சொறி, சிரங்கு போன்ற தோல் சம்பந்தமான பிரச்சனைகளும் சரியாகும்.
 
வெந்தய கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். மேலும் உடல் சூட்டை தணிக்கும். அதேப்போல் வறட்டு இருமல் சரியாகும்.
 
குடலில் புண்கள் இருந்தால் இந்த வெந்தய கீரையை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். மேலும் இந்த கீரையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலம் சுத்தமாவதோடு, உடல் முழுவதும் சுத்தமாகும்.
 
நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்தால் இடுப்பு வலி ஏற்படும். அதனால் வெந்தய கீரை, கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றை சேர்த்து அதை நெய்யில் வேகவைத்து அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் இடுப்பு வலி சரியாகும்.
 
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி  உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால்  வரும் மயக்கம் சரியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்