முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, B1, B2, B3, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை முருங்கை விதைக்கு உள்ளது, அதோடு சர்க்கரை நோய் வராமலும் தடுக்கிறது. நம் உடம்பில் செல் சிதைவுகள் ஏற்படாமல் தடுத்து, புதிய செல்களை உருவாக்கத்தை அதிகரிக்க முருங்கை விதைகள் உதவுகிறது.
இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அடிக்கடி முருங்கை விதைகளை உணவில் எடுத்துக் கொண்டால் தூக்கமின்மை பிரச்னை வராது. முருங்கை விதைகள் இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.