என்னவெல்லாம் அற்புத சத்துக்களை கொய்யா பழம் கொண்டுள்ளது தெரியுமா...?

வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (12:55 IST)
கொய்யா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள்  நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். கண் பார்வை கோளாறுகளை சரி செய்கிறது.


கொய்யா பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது. செம்பு சத்து தைரொய்ட் சுரப்பியை மற்றும் அது சுரக்கும் ஹார்மோன்களின் சமசீர் தன்மையை மேம்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கிறது.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. .

கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.

தினந்தோறும் காலை அல்லது மதியத்தில் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் பிரச்னையை விரைவில் தீர்க்கும். அல்சர், குடல்களில் ஏற்படும் புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது கொய்யா பழம்.

வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது. இரத்தத்தில் இருக்கும் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி ரத்தத்தை சுத்தப் படுத்துகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்