நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள் என்ன தெரியுமா...?

காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான  விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. அதேநேரத்தில் காய்கறிகளை  உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.
பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில்  தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் ஏ சக்தியினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன.
 
நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல்  தவிர்க்கலாம்.
 
கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருக்கும்.  அடிக்கடி உணவில் கீரை சேர்த்து  கொள்வதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தடுக்கப்படுகிறது. கீரைகளில் லூடின் என்னும் ஊட்டச்சத்து இருப்பதால் புற்றுநோய்  செல்களை அழிக்க உதவும்.  
 
முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால், ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.
 
மீன்களை அடிக்கடி சாப்பிடுவதால் உயற் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், [அக்கவாதம் போன்ற பிரச்சனைகள் குணமாகும். வாரத்தில்  இரண்டு நாட்கள் கொழுப்பு சத்து நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
 
உடலின் பொட்டாசியம் அளவு சக்தி தேவைக்கு முக்கியப் பங்காற்றக் கூடிய நிலையில், பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. தவிர, பழங்கள், காய்கறிகளில் அமினோ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளை பராமரிக்க ஏதுவாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்